தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லாவோஸ் ராமாயணத்தைக் கண்டுகளித்த மோடி

1 mins read
0d02816a-c632-48ba-b7f6-f22b2fa1ee1b
இந்தியச் சமூகத்தினரும் லாவோஸ் கலைஞர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். - படம்: இந்திய அரசாங்கத்தின் ஊடகத் தகவல் பிரிவு 

ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக லாவோஸ் தலைநகர் வியந்தியனுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, லாவோஸ் கலாசாரத்தின் சாயலில் படைக்கப்படும் ராமாயண நிகழ்ச்சியைக் கண்டுகளித்தார்.

அக்டோபர் 10ஆம் தேதி லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அக்டோபர் 10ஆம் தேதி லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. - படம்: இந்திய அரசாங்கத்தின் ஊடகத் தகவல் பிரிவு 

பல நூற்றாண்டுகளாக இந்தியப் பாரம்பரியத்தின் கலவையாக லாவோசில் பின்பற்றப்படும் சில கலாசார வடிவங்களில் ஒன்று ‘ஃபலாக் ஃபலாம்’ அல்லது ‘ஃப்ரா லாக் ஃப்ரா ராம்’ எனும் லாவோசின் ராமாயணம்.

இன்றளவும் மக்களின் ரசனையை ஈர்க்கும் அந்த ராமாயணக் காட்சிகளோடு பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லாவோசில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரும் அவரை வரவேற்கத் திரண்டிருந்தனர்.

அக்டோபர் 10ஆம் தேதி லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு லாவோசிலுள்ள இந்தியச் சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர்.
அக்டோபர் 10ஆம் தேதி லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு லாவோசிலுள்ள இந்தியச் சமூகத்தினர் வரவேற்பு அளித்தனர். - படம்: இந்திய அரசாங்கத்தின் ஊடகத் தகவல் பிரிவு 

லுவாங் பிரபாங் நகரைச் சேர்ந்த ராயல் தியேட்டர் அமைப்பு அந்நிகழ்ச்சியைப் படைத்தது.

முன்னதாக லாவோஸ் மத்திய பௌத்த அமைப்பின் மூத்த புத்த பிக்குகள் திரு மோடிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

இந்தியாவும் லாவோசும் இணைந்து மரபுடைமையை வெளிக்கொணரும் முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக லாவோசிலுள்ள வாட் பொ ஆலயத்தையும் அதனுடன் தொடர்புடைய பழம்பெரும் கட்டடங்களையும் மறுசீரமைக்கும் பணிகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஈடுபட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்