மோடி, யூனுஸ் பேங்காக்கில் சந்திக்கக்கூடும்

1 mins read
49a09c12-6939-4291-8d83-663e25b9d9b3
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகம்மது யூனுசும் அடுத்த மாதம் தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற இருக்கும் பிம்ஸ்டெக் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும்போது சந்தித்துப் பேசக்கூடும். - படங்கள்: இந்திய ஊடகம்

டாக்கா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகம்மது யூனுசும் அடுத்த மாதம் தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெற இருக்கும் பிம்ஸ்டெக் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும்போது சந்தித்துப் பேசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் உச்சநிலை மாநாடு நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இம்முறை இந்த மாநாட்டைத் தாய்லாந்து ஏற்று நடத்துகிறது.

பிம்ஸ்டெக் உச்சநிலை மாநாட்டின் அடுத்த தலைவராகப் பங்ளாதேஷ் பொறுப்பேற்கும்.

பொருளியல் உறவுகளை வலுப்படுத்த கடற்துறை, மின்னிலக்கம் போன்ற இணைப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என்று பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்