ஃபேஸ்புக்கிலிருந்து மோடியின் உரை நீக்கம்: மெட்டா நிறுவனர் மன்னிப்பு கோர வலியுறுத்து

ஃபேஸ்புக்கிலிருந்து மோடியின் உரை நீக்கம்: மெட்டா நிறுவனர் மன்னிப்பு கோர வலியுறுத்து

2 mins read
சட்டப் பாதுகாப்பும் விலக்களிப்பும் திரும்பப் பெறப்படலாம் என எச்சரிக்கை
e28eba09-dfba-492f-9dec-4a334ef87956
மூன்று நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கிற்குக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற நிலைக்குழு புதன்கிழமை (ஆகஸ்ட் 5) வலியுறுத்தியுள்ளது.

மூன்று நாள்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ஸுக்கர்பெர்க்கிற்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பும் விலக்களிப்பும் திரும்பப் பெறப்படலாம் என்று மக்களவைச் செயலகத்தின் இயக்குநர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“தேர்வு சர்ச்சைகள், வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள், இளையர்களிடையே பிரதமர் மோடி பேசிய காணொளி, ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டதை நிலைக்குழு மிகவும் கடுமையாகக் கருதுகிறது,” என்று திருவாட்டி ஏ. ஜோதிர்மயி கையெழுத்திட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோசடிச் செயலிகள்மூலம் முதலீட்டாளர்கள் ரூ.48 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்த விவகாரத்தில், ‘கூகல் இந்தியா’ நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த நிலைக்குழு கோரியுள்ளது.

மோசடிச் செயலிகளில் முதலீடு செய்து 48 லட்ச ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்ததாகப் புகாரளிக்கப்பட்டது. அதனையடுத்து, இணையவழி மோசடிக் கும்பலுடன் சேர்த்து ‘கூகல் இந்தியா’ நிறுவனத்தின் தலைவரையும் இணைக் குற்றவாளியாகச் சேர்த்து ஹைதராபாத் காவல்துறையின் இணையப் பிரிவு நடவடிக்கை எடுத்தது குறித்து நிலைக்குழு விவாதித்தது.

இந்நிலையில், கூகல் இந்தியாவிற்கு எதிராக அதேபோன்ற நடவடிக்கையை இந்திய அரசும் எடுக்க வேண்டும் என்று நிலைக்குழு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்