பெங்களூர்: பெங்களூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே வாரத்தில் 650க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரை போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகனச் சோதனைகள் நடைபெற்றன.
53 போக்குவரத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மொத்தம் 43,253 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சோதனையின்போது அதிவேகத்தில் வாகனம் ஓட்டியவர்கள் மீதும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.89 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

