தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோடியைக் கண்டிக்கும் தாயார்; ஏஐ காணொளியால் பாஜக கொந்தளிப்பு

1 mins read
678fee0c-16bf-42f0-931f-4fbdb59e2408
பிரதமர் மோடியின் அரசியலை அவரது தாயார் கடுமையாகக் கண்டித்துப் பேசுவது போன்று காணொளியில் சித்திரிக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பீகார் மாநில காங்கிரஸ் பிரிவு வெளியிட்ட காணொளிக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அரசியலை அவரது தாயார் கடுமையாகக் கண்டித்துப் பேசுவது போன்று அந்தக் காணொளியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இது பிரதமரின் தாயாரையும் பெண்களையும் ஏழைகளையும் அவமதிக்கும் செயல் என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் தொடர்ந்து பிரதமரின் தாயார் குறித்து அவதூறு பரப்பி வருகின்றன.

“தாய்மார்களையும் சகோதரிகளையும் கேலி, கிண்டல் செய்து வரும் இக்கட்சிகளுக்கு எதிர்வரும் பீகார் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

“நாட்டில் உள்ள ஏழைகளை இந்தியாவில் உள்ள ஒரு தேசியக் கட்சி இந்த அளவுக்கு வெறுப்பது வேதனையானது,” என்றார் பிரதீப் பண்டாரி.

பிரதமர் மோடியின் தாயை காங்கிரஸ் மீண்டும் அவமதித்துள்ளதன் மூலம், அது இனி காந்தியின் காங்கிரஸ் கட்சி அல்ல என்பது உறுதியாகிவிட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

ஏற்கெனவே, பீகாரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காங்கிரசார் முன்னிலையில், அடையாளம் தெரியாத ஒருவர், பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறாக சில கருத்துகளைத் தெரிவித்தது சர்ச்சையானது.

குறிப்புச் சொற்கள்