தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்ணை மறைத்த கள்ளக்காதல்; பத்து வயது மகனைக் கொன்று துண்டாக்கிய தாய்

1 mins read
9708d0c5-553f-4ae0-bbdd-3dbdeb37fd97
கைது செய்யப்பட்ட தீபாலி, காதலன் ஜோதிமோய்.  - படம்: ஊடகம்
multi-img1 of 2

கௌஹாத்தி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெற்ற மகனைக் கொன்ற பெண்ணை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது.

பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பெட்டியில் அடைத்து வனப்பகுதியில் வீசியெறிந்துள்ளார் தீபாலி ராஜ்போங்ஷி என்ற அந்தப் பெண்மணி.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தன் கணவரைப் பிரிந்து கௌஹாத்தியில் வசித்து வருகிறார்.

இரு நாள்களுக்கு முன்பு, ‘டியூஷன்’ வகுப்புக்குச் சென்ற, பத்து வயதான தனது மகன் மிருன்மோய் பர்மன் வீடு திரும்பவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தார் தீபாலி.

சிறுவன் தேடப்பட்ட நிலையில், கௌஹாத்தியில் உள்ள பாசிஷ்டா கோவிலுக்கு அருகே புதர் ஒன்றில் பெட்டி கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதைத் திறந்தபோது, சிறுவன் மிருன்மோய் கொல்லப்பட்ட பின்னர், அவனது உடலைத் துண்டுகளாக்கி பெட்டிக்குள் திணித்திருப்பது தெரியவந்தது.

பெட்டிக்கு அருகே சிறுவனின் புத்தகப் பையும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, தீபாலியிடம் காவல்துறை கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டபோது, அவர் தனது காதலனுடன் சேர்ந்து மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கணவர் பிகாஷ் பர்மானிடம் இருந்து, விவாகரத்து கோரி இரண்டு மாதங்களுக்கு முன்புதான், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தீபாலி.

அவருக்கும் அரசு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராகப் பணியாற்றும் ஜோதிமோய் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது என்றும் அதற்கு பத்து வயது மகன் மிருன்மோய் தடையாக இருந்ததாகக் கருதி, அவனை தீபாலி கொன்றதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்