தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் விருது வென்று தாய் - மகன் சாதனை

1 mins read
1589303c-e6cf-4833-9583-354a1c6ad382
லெப்டினன்ட் ஜெனரல் சாதனா எஸ். நாயர் (இடது), ஸ்குவாட்ரன் லீடர் தருண் நாயர். - படம்: இந்தியா டிவி

புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் தாயும் மகனும் ஒரே ஆண்டில் அதிபர் விருது வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

லெப்டினன்ட் ஜெனரல் சாதனா எஸ். நாயர், ஸ்குவாட்ரன் லீடர் தருண் நாயர் என்ற இருவர்தான் அப்பெருமைக்கு உரியவர்கள்.

ராணுவத்தில் உன்னதச் சேவைக்காகவும் தலைமைத்துவத்திற்காகவும் திருவாட்டி சாதனாவிற்கு ‘அதி விஷிஷ்த் சேவா’ பதக்கம் வழங்கப்பட்டது.

இந்திய விமானப் படையில் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்தி முன்மாதிரி வீரராகத் திகழ்வதற்காக, பெருவீரத்திற்கான ‘வாயு சேனா’ பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் திரு தருண்.

இந்த அரிய சாதனையானது தாய்-மகன் இருவரும் நாட்டின்மீது கொண்டுள்ள கடப்பாட்டையும் தத்தம் துறைகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு சிறந்து விளங்குவதையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

தங்கள் பங்களிப்பின்மூலம் இருவரும் எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர் என்றும் புகழாரம் சூட்டப்பட்டது.

குடியரசு தினத்திற்கு முதல்நாள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 93 பேருக்கு விருது வழங்க அதிபர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்