சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது தடையை மீறி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 24 இருசக்கர வாகனங்களைப் போக்குவரத்துக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பண்டிகைக் காலங்களில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்தும் சென்னையில் பல முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு சிலர் வாகனப் பந்தயங்களில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பந்தயத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு, 24 மோட்டார் சைக்கிள்கள் நேற்று அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனங்களை ஓட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

