ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகும் எம்.பி.க்கள்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகும் எம்.பி.க்கள்

படம்: இந்திய ஊடகம்

26 Sep 2024 - 6:10 pm

1 mins read

அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆர்.கிருஷ்ணய்யா தற்போது தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அதற்கான கடிதத்தை கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் அனுப்பி வைத்தார். அவரது பதவி விலகலை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார். இதனால், மாநிலங்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பலம் 11லிருந்து 8ஆகக் குறைந்துள்ளது.

ஏற்கெனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான மோபிதேவி வெங்கட்ரமணா, மஸ்தான் ராவ் ஆகியோர் பதவி விலகி விட்டனர். இதில் தற்போது பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சங்க தேசிய தலைவரான ஆர். கிருஷ்ணய்யாவும் பதவியிலிருந்து விலகி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்