டோனியின் மகளுக்குப் பரிசளித்த மெஸ்ஸி

டோனியின் மகளுக்குப் பரிசளித்த மெஸ்ஸி

1 mins read
779dc291-84c7-450c-b064-ddd4678b903f
-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியின் மகளுக்கு அர்ஜென்டினா காற்பந்து அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி, தான் கையெழுத்திட்ட அர்ஜென்டினா அணியின் சீருடையைப் பரிசளித்துள்ளார்.

அந்தச் சீருடையை அணிந்து இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டோனியின் மகள் ஸிவா, 'தந்தையைப்போல் பிள்ளை' எனக் குறிப்பிட்டுள்ளார். சீருடையில் பாரா ஜீவா என எழுதப்பட்டு அதற்குக் கீழ் மெஸ்ஸி கையெழுத்திட்டுள்ளார்.

ஸிவாவின் இன்ஸ்டகிராம் பதிவை டோனி மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

View post on Instagram