தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

40 ஆண்டுகளுக்கு முன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட முகம்மது அலி

1 mins read
cb30d2ae-516b-4336-afa4-94ec96298369
முகம்மது அலி. - படம்: ஊடகம்

தான் இளவயதில் செய்த கொலைகள்தான் தன் குடும்பத்தை சீரழிக்கிறது என்று நினைத்து தான் செய்த இரண்டு கொலைகளை ஒப்புக்கொண்டு 53 வயது முகம்மது அலி, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கேரளாவின் கொய்கோட்டைச் சேர்ந்த முகமது அலியின் மூத்த மகன் இறந்த நிலையில் அவரது இளைய மகன் பலத்த காயமடைந்தார். மேலும் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்துள்ளன.

தனது கடந்த கால குற்றங்களே இதற்குக் காரணம் என்று அவர் காவல்துறையை அணுகி உண்மையை ஒப்புக்கொண்டார்.

1986ஆம் ஆண்டு, முகமது அலி (அப்போது 14 வயது) அடிக்கடி தன்னைத் துன்புறுத்தி வந்த 20 வயது இளைஞனை ஒரு நாள் உதைத்து கால்வாயில் தள்ளினார். அதன்பின்னர் பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இரண்டு நாள்கள் கழித்து அவர் திரும்பி வந்தபோது, அந்த இளைஞர் கால்வாயில் இறந்து கிடந்தார். அப்போது யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் காவலர்கள் அதை ஒரு சாதாரண மரணமாகப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

பின்னர், 1989ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரையில் மற்றொரு நபரைக் கொன்றதாகவும் முகமது அலி ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில் அங்கு அடையாளம் தெரியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதும் ஆதாரங்கள் இல்லாததால், அந்த வழக்கும் அப்போது மூடப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பழைய கோப்புகளை காவலர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்

குறிப்புச் சொற்கள்