தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முறைகேடாக நடந்துகொண்ட மகனைக் கொன்று கண்டந்துண்டமாக வெட்டிய தாய்

2 mins read
a7a2af10-797b-4d8c-b97d-ac701349080b
கொல்லப்பட்ட ஷியாம் பிரசாத், தன் தாயாரின் சகோதரிகளை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. - படம்: பிக்சாபே

அமராவதி: துப்புரவுப் பணியாளராக வேலை செய்த தனது 35 வயது மகனை, 57 வயது தாயார் பிப்ரவரி 13ஆம் தேதி கொன்றதாக பிரகாசம் காவல்துறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் குடும்பத்தாரின் உதவியோடு அந்தப் பெண் தன் மகனைக் கொன்று அந்த உடலை ஐந்து பகுதிகளாக வெட்டிச் சிதைத்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மகன் கே.ஷியாம் பிரசாத்தை கே.லட்சுமி தேவி கொன்றதாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏஆர் தாமோதர், “காம எண்ணம் கொண்ட மகனின் முறைகேடான நடத்தையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் கொன்றுவிட்டார்,” என்றார்.

ஹைதராபாத், கம்மம், பெங்களூரு ஆகிய ஊர்களில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் திருமணமாகாத ஷியாம் பிரசாத் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தன் தாயாரின் சகோதரிகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது.

கோடரி போன்ற கூரான ஓர் ஆயுதத்தால் ஷியாம் பிரசாத் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உடல் பகுதிகளைத் தாங்கிய மூன்று சாக்குப் பைகள், கம்பம் கிராமத்தில் உள்ள நகலகாண்டி வாய்க்காலில் போடப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி தேவியை அதிகாரிகள் தேடி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதே போன்ற ஒரு சம்பவம் புனே நகரிலும் நடந்துள்ளது. தனது இரு பிள்ளைகளைக் கொன்றதுடன் கணவரைக் கடுமையாகக் காயப்படுத்திய பெண்ணை மகாராஷ்டிரக் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டை காரணத்தால் இரண்டு வயது, ஒரு வயது குழந்தைகளை அந்தப் பெண் கொன்றிருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்