தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2027ல் தொடங்கும் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை

1 mins read
02a05d69-2a33-43d3-87e6-9df6bdb53f38
கடந்த 2017ல் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, எட்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

மும்பை: அகமதாபாத், மும்பை இடையேயான புல்லட் ரயில் சேவை எதிர்வரும் 2027ல் துவங்கும் என ஜப்பான் நாட்டுக்கான இந்திய துாதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நெரிசலைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் இடையே அதிவேக புல்லட் ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான திட்டத்தை பிரதமர் மோடி, 2015ல் அறிவித்தார்.

கடந்த 2017ல் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, எட்டு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய துாதர் சிபி ஜார்ஜ் 2027ல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்றார்.

“இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஜப்பான் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ரயில் சேவையில் அந்நாட்டின் பங்கு அளப்பரியது.

“மும்பை, அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் சேவை பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக, ஜப்பானில் ரயில்கள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை,” என்றார் திரு ஜார்ஜ்.

குறிப்புச் சொற்கள்