செல்லப்பிராணிக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கித் தந்த பெண்

1 mins read
ee72872a-20ff-489a-b646-3980117c8b19
நாயின் கழுத்தில் அதன் உரிமையாளர் தங்கச் சங்கிலியை அணிந்துவிடும்போது அது உற்சாகத்தில் தனது வாலை ஆட்டுவதைக் காணொளி காட்டியது. - படம்: இன்ஸ்டகிராம்

தமது செல்லப்பிராணிக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கித் தந்துள்ளார் மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா.

‘டைகர்’ எனும் பெயருடைய நாய்க்கு அவர் தங்கச் சங்கிலி வாங்கிக் கொடுப்பதைக் காட்டும் இன்ஸ்டகிராம் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

நகைக்கடையில் சங்கிலியை சல்தான்ஹா தேர்வுசெய்யும் வேளையில், அவருக்காக டைகர் காத்திருக்கிறது. அந்த நாயின் கழுத்தில் அவர் சங்கிலியை அணிந்துவிடும்போது அது உற்சாகத்தில் தனது வாலை ஆட்டுவதை அக்காணொளி காட்டியது.

View post on Instagram
 

சல்தான்ஹா வாங்கிய தங்கச் சங்கிலியின் எடை 35 கிராம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பகிரப்பட்ட அக்காணொளியைப் பார்த்த பலரும், சல்தான்ஹாவின் செயலைப் பாராட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்