கொலை, கொள்ளை: 35 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி

கொலை, கொள்ளை: 35 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி

2 mins read
ddbe6a12-c327-4523-9f9a-9dd3d2261401
இதுவரை 35 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ரவி குமார் திவாகர். - படம்: ஸீ நியூஸ்
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் விரைவு நீதிமன்றம் கடந்த நான்கு மாதங்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் குல்தீப் குமார் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தெரிவித்தார்.

அந்த வழக்குகளில் வழக்கறிஞர் கொலை, ஊர்க்காவல் படை வீரர் கொலை, நெடுஞ்சாலைக் கொள்ளை மற்றும் பிற கொலைச் சம்பவங்களும் அடங்கும்.

தூக்குத் தண்டனை அல்லது மரண தண்டனை என்பது மிகவும் கொடூரமான குற்றங்களுக்கு விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரவி குமார் திவாகர் என்னும் நீதிபதி பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து வருகிறார்.

அவர் நீதிபதியாக இருக்கும் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மரண தண்டனைத் தீர்ப்புகளை வழங்கியது.

வழக்கறிஞர் சமீர் சைஃபி கொலை வழக்கில் ஏப்ரல் 6 அன்று மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 28ஆம் தேதி நால்வர், மே 20ஆம் தேதி ஒருவர், ஜூன் 20 அன்று இருவர் என ஏப்ரல் மாதத்தில் மட்டும் பத்துப் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஜூலை 2ஆம் தேதி ஒருவர், ஜூலை 6 அன்று இருவர், ஜூலை 17ஆம் தேதி நால்வர் என ஏழு பேருக்கு ஜூலை மாதத்திலும் ஆகஸ்ட் 12ல் ஒருவர், ஆகஸ்ட் 13ல் நால்வர் என ஐவருக்கு ஆகஸ்ட் மாதத்திலும் நீதிபதி திவாகர் மரண தண்டனை விதித்தார்.

ஆக அண்மைய தீர்ப்பில், 27 ஆண்டுகளுக்கு முன்பு சலீம் என்ற மர வியாபாரியைக் கடத்திச் சென்று பணம் கேட்டு கொலை செய்ததற்காக ஷாநவாஸ் என்பவருக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மறுநாளான ஆகஸ்ட் 13ஆம் தேதி, பவன் குமார் என்பவரை 2014ஆம் ஆண்டு கொலை செய்ததற்காக ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் பரேலி நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது 13 பேருக்கு மரண தண்டனைகளை நீதிபதி திவாகர் விதித்தார்.

அவரால் இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
கொலைகொள்ளைமரண தண்டனை