குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய முறுக்கு நிறுவன உரிமையாளருக்கு சிறை

குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய முறுக்கு நிறுவன உரிமையாளருக்கு சிறை

சித்திரிப்பு: இந்து தமிழ் திசை

25 Nov 2026 - 7:07 pm

1 mins read

சென்னை: எண்ணூர் பகுதியில் உள்ள நெய் முறுக்கு உற்பத்தி நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய வழக்கில், நிறுவன உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அந்நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வேலை வாங்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக திருவொற்றியூர் வட்டாட்சியர் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த எண்ணூர் காவல்துறையினர் முறுக்கு உற்பத்தி நிறுவன உரிமையாளரான போத்திராஜா, 52, என்பவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு ஆட்படுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவொற்றியூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், போத்திராஜா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்கீழ் போத்திராஜாவுக்கு 1.1 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின்கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தச் சிறைத்தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தைதொழிலாளர்நீதிமன்றம்மரண தண்டனை