குடமுழுக்கு விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு

1 mins read
5ec7e5e3-4d82-4617-a868-376e38542363
200க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் சீர் வரிசையுடன் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள செல்கின்றனர். - படம்: ஊடகம்

நாகப்பட்டினம்: நாகையில் நடந்த அதிபத்த நாயனார் கோவில் குடமுழுக்கு விழாவில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், நாகை நம்பியார் நகரில் அவதரித்தவர். அவருக்கு அங்கு புதிதாக கற்கோவில் கட்டப்பட்டது. அங்கு, புதிய ஒளி மாரியம்மன் கோவில், கப்பல் விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டது.

இக்கோவில்களின் குடமுழுக்கு விழா ஜூன் 5ஆம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.

குடமுழுக்கு நாளன்று காங்கிரஸ் தேசிய சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் மீரா உசேன் தலைமையில், 100 பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அங்குள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து 51 தாம்பூலத் தட்டுகளில் மங்கலப் பொருள்கள், பழங்கள், இனிப்புகளைச் சீர்வரிசையாக எடுத்துச் சென்றனர்.

குடமுழுக்கு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்