தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு கா‌ஷ்மீரில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் நிறுவனம்

1 mins read
469ac709-4eab-47a6-b3c2-e47c3ff77a31
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். - கோப்புப் படம்: outlookindia.com / இணையம்

ஸ்ரீநகர்: முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு கா‌ஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிவி பாரத் போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டன. இதுகுறித்து ஜம்மு கா‌ஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட மறுநாள் இச்செய்தி வெளியாகியுள்ளது.

முரளிதரனுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து ஜம்மு கா‌ஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகப் பல இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அந்நிலத்தை முரளிதரனுக்கு வழங்க அரசு எடுத்த முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர்.

அந்நிலம், முரளிதரனுக்கு இலவசமாக வழங்கப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சாடினார். அதனைத் தொடர்ந்து, ஜம்மு கா‌ஷ்மீர் அரசாங்கத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் சிலர், முரளிதரனின் ‘சிலோன் பெவரேஜெஸ் கேன் பிரைவேட் லிமிடெட்’ (Ceylon Beverages Can Pvt Ltd) நிறுவனம் ஜம்மு கா‌ஷ்மீரிலிருந்து முதலீடுகளை மீட்டுக்கொள்ளப்போவதாக இடிவி பாரத்துக்கு அதிகாரபூர்வத் தகவல்கள் கிடைத்தன.

‘சிலோன் பெவரேஜெஸ்’, குளிர்பானங்களை விட்டு நிரப்புவதற்கான உலோகக் குவளை உற்பத்தி செய்கிறது. அந்நிறுவனத்துக்கு ஜம்மு கா‌ஷ்மீரின் கத்துவா வட்டாரத்தில் நிலம் வழங்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்