25 வயதில் எம்எல்ஏவான மைதிலி தாக்குர்

1 mins read
f71288e2-6a74-4a27-8a73-23da740824fc
இளம் வயதிலேயே தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மைதிலி தாக்குர். - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: நாட்டுப்புறப் பாடகியான மைதிலி தாக்குர் பீகார் சட்டசபையின் ஆக இளைய எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பீகார் சட்டசபைத் தேர்தல் அரசியலில் இளம் வேட்பாளராக அறியப்பட்டவர் மைதிலி தாக்குர். 25 வயது நிரம்பிய இவர், சமூக ஊடகங்களில் பிரபலமானவர். இவர் அலி நகர் தொகுதியில் வென்று எம்எல்ஏவாகி உள்ளார்.

இதன் மூலம் பீகார் அரசியலில் மிக இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான வினோத் மிஸ்ராவை எதிர்த்து களம் கண்டார்.

மாநிலத்தில் பிரபலமாக அறியப்பட்ட இவர், 100க்கும் மேற்பட்ட காணொளிகளைப் பதிவேற்றி, அதன் மூலம் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.

வெற்றி பெறுவாரா என்று பலரும் கூறி வந்த நிலையில், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, பாஜக எம்எல்ஏவாக வெற்றி பெற்று இருக்கிறார். அலிநகர் தொகுதி ராஷ்டிய ஜனதா தள கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதியாகும்.

கட்சியில் சேர்ந்தார், மறுநாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்பொழுது எம்எல்ஏவாகிவிட்ட நிலையில், அவரது பயணம் பீகார் மாநில அரசியலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்