தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகார் வாக்காளர் பட்டியல்: இரு பாகிஸ்தானியப் பெண்களின் பெயர் நீக்கம்

1 mins read
053cc52e-1cfd-4b45-a7ca-8e456d5a6839
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பாகிஸ்தானியப் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. - படம்: இந்திய ஊடகம்

பகல்பூர்: பீகார் வாக்​காளர் பட்​டியலில் பாகிஸ்​தானியப் பெண்கள் இருவரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளதை இந்திய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்​தானிலிருந்து 1956ஆம் ஆண்டு இந்​தி​யா​வுக்கு வந்த பாகிஸ்​தானியப் பெண்​கள் இருவருக்கு வாக்​காளர் அடை​யாள அட்டை வழங்​கப்​பட்​டுள்​ளது. அண்மையில் பீகாரில் மேற்​கொண்ட தீவிர வாக்​காளர் திருத்​தப் பணி​யின்போது அவர்​கள் இரு​வரின் வாக்​காளர் அட்​டைகள் சரி​பார்க்​கப்​பட்​டுள்​ளன.

மத்​திய உள்​துறை அமைச்​சின் உத்​தர​வின் பேரில் நடத்​தப்​பட்ட ஆய்​வில் இவர்​கள் பாகிஸ்​தானியர்​கள் என்று தெரியவந்துள்​ளது.

மேலும், தற்​போது அவர்​கள் வயது மூத்​தவர்​களாக இருப்​ப​தா​லும் வாக்​காளர் தீவிர திருத்​தப் பணி​களின்போது அவர்​களால் சரியான தகவல்​களை அளிக்க முடிய​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இதையடுத்து, அவர்​கள் இரு​வரின் பெயர்​களை​யும் வாக்​காளர் பட்​டியலிலிருந்து நீக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

‘‘மத்​திய உள்​துறை அமைச்​சிடமிருந்து எங்​களுக்கு கிடைத்த சில தகவல்​களைச் சரிபார்த்தபோது, அந்த இருவரும் பாகிஸ்​தானியர்​கள் என்​பது உறு​தி​யானது. அதன்​பிறகு அவர்​களு​டைய பெயர்​களை வாக்​காளர் பட்​டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது,’’ என்று பகல்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் நவல் கிஷோர் சவுத்ரி கூறும்​போது தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்