தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: ‘பார்க்கிங்’ தமிழ் படத்துக்கு 3 விருதுகள்

1 mins read
72c8481a-8f73-4221-b8d1-1f943baa958c
‘பார்க்கிங்’  படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: கடந்த 2023ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் சிறந்த திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வாகி உள்ளது. சிறந்த துணை நடிகராக, இதில் நடித்த எம்எஸ் பாஸ்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

‘வாத்தி’ படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதை ஜிவி பிரகாஷ் குமாரும் ‘உள்ளொழுக்கு’ மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை ஊர்வசியும் ‘லிட்டில் விங்ஸ்’ ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை சரவணமுத்து செளந்தரபாண்டி, மீனாட்சி சோமனும் பெற்றுள்ளனர்.

சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் (‘அனிமல்’ படத்துக்காக) பெற்றுள்ளார்.

சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது ‘தி கேரளா ஸ்டோரி’ மலையாளப் படம்.

சிறந்த படத்துக்கான தேசிய விருது ‘12த் ஃபெயில்’ படத்துக்கும், அதில் நடித்த விக்ராந்த் மாசிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டன.

இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கும் கிடைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ‘ஜவான்’ படத்துக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.

சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகியுள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் உட்பட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்