நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் உயரிய பதவி

1 mins read
f57ca067-bc4b-4cfd-93cf-784521a1d86a
நீரஜ் சோப்ராவுக்கு‘லெப்டினன்ட் கர்னல்’ என்ற பதவியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் உயரிய பதவி கிடைத்துள்ளது. டெல்லியில் புதன்கிழமை (அக்டோபர் 22) நடந்த விழாவில் அவருக்கு ‘லெப்டினன்ட் கர்னல்’ என்ற பதவியைத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

அரியானாவைச் சேர்ந்தவர். 27 வயதான நீரஜ் சோப்ரா 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு சுபேதர் மேஜராகப் பதவி உயர்வு பெற்றார்

“லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசத்தின் பெருமை ஆகிய உயர்ந்த பண்புகளின் அடையாளமாகத் திகழ்கிறார். விளையாட்டுச் சமூகம் மற்றும் ஆயுதப்படையினருக்கு தலைமுறை தலைமுறையாக உத்வேகம் அளிக்கும் சேவையைச் செய்கிறார்,” என்று திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ராணுவத்தளபதி உபேந்திர திவேதி மற்றும் மூத்த அதிகாரிகள், சோப்ராவின் குடும்பத்தினர் ஆகியோர்கலந்து கொண்டனர்.

தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்