நீட், நெட் வினாத்தாள் குளறுபடி: 50 பேரைப் பணிநீக்கம் செய்த தேசியத் தேர்வு அமைப்பு

நீட், நெட் வினாத்தாள் குளறுபடி: 50 பேரைப் பணிநீக்கம் செய்த தேசியத் தேர்வு அமைப்பு

2 mins read
f21eda26-566f-4f47-8d18-87c971676961
புதுடெல்லியில் உள்ள மத்தியக் கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில், தேசியத் தேர்வு அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மத்தியக் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி (இடது) பரிசீலித்தார். - படம்: பிடிஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் வினாத்தாள் குளறுபடி காரணமாக ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி - நெட் தேர்வில் மூன்று பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் எனத் தேசியத் தேர்வு அமைப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து எழுந்த கடுமையான விமர்சனங்களைச் சமாளிக்கும் வகையில், மேலும் சில ஊழியர்களை அது பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் நீக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், தேர்வு முறையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தலைமைப் பொறுப்புகளுக்குத் தொழில்முறை நிபுணர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கையிலும் அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

யுஜிசி - நெட் மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் புதுடெல்லியில் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டன.

மாணவர்களின் கல்விக் கனவும் எதிர்காலத் திட்டங்களும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறிய போராட்டக்காரர்கள், தேசியத் தேர்வு அமைப்பைக் கலைக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், மாணவர்களின் நலனைக் கருதியே பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அனைத்துத் தேர்வுகளும் நேர்மையாகவும், பிழையின்றி நடப்பதை உறுதிசெய்யவும் உள்நாட்டுப் பாதுகாப்பு விதிகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியக் கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, உயர்கல்வித் துறைச் செயலாளர், தேசியத் தேர்வு அமைப்பின் தலைமை இயக்குநர், மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) நடத்தினார்.

வினாத்தாள் தொடர்பான அண்மைய பிரச்சினைகளைத் தொடர்ந்து அமைப்பு எடுத்துள்ள நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தேர்வு முறையைச் சீரமைப்பது ஆகியவை குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அமைப்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கல்வி அமைச்சு முதலில் குறிப்பிட்டிருந்தாலும், அதில் ஜூலை மாதம் நீக்கப்பட்ட 47 அதிகாரிகளும் அடங்குவர் எனத் தகவல் அறிந்த அதிகாரி ஒருவர் பின்னர் தெளிவுபடுத்தினார்.

தேர்வு பாதுகாப்பு நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறும் ரகசியச் செயல்பாட்டுக்கான கட்டமைப்பு, தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், இணையத் தொடர்பில்லாத கணினி அமைப்புகள், மின்னணுச் சாதனங்களை ஒப்படைக்கும் விதிகளைப் போர்க்கால அடிப்படையில் முழுமையாக மறுசீரமைக்குமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
தேர்வுஅதிகாரிபணிநீக்கம்ஊழியர்