நீட் மறுதேர்வு: 22.70 லட்சம் பேர் பங்கற்பு

நீட் மறுதேர்வு: 22.70 லட்சம் பேர் பங்கற்பு

2 mins read
b842e635-469f-4bb5-b4e4-5bd690616e12
ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 23.79 லட்சம் மாணவர்கள் எழுதினர். - படம்: எக்கானமிக் டைம்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது.

மொத்தம் 5,440 மையங்களில் நடைபெற்ற தேர்வின்போது இரண்டு லட்சம் அதிகாரிகள், 6,700 பார்வையாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்க தேர்வு மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

நீட் நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்வாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

கடந்த மே மாதமே மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் யுஜி தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. அதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

ஆனால், தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் மாணவர்கள், பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, பலர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனால், மாணவர்கள் பலர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துகொள்ளும் அளவுக்குச் சென்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 23.79 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

551 இந்திய நகரங்கள், 14 வெளிநாட்டு நகரங்களில் 5,440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றைப் பல்வேறு நகரங்களுக்குக் கொண்டுசேர்க்கும் பணியில் விமானப் படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதனிடையே, நீட் நுழைவுத் தேர்வுக்கான நேரம் 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது. மேலும், முறைகேடுகளைத் தவிர்க்க ஆதார் அட்டை அடிப்படையிலான ‘பயோமெட்ரிக்’ முறை, ‘ஏஐ’ கண்காணிப்புக் கேமராக்கள் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன் ‘டெலிகிராம்’ செயலிக்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வு ஏற்பாடுகள் குறித்து இந்தியத் தேர்வு முகமை எக்ஸ் தளத்தில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் குறைந்தபட்சம் 40 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் 95,000 தேர்வு அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் அம்முகமை குறிப்பிட்டிருந்தது.

மேலும், இத்தேர்வுக்காக ஏறக்குறைய 51,000 ‘ஜாமர்’ கருவிகள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நீட் தேர்வுமாணவர்கள்வினாத்தாள்மருத்துவம்