புதுடெல்லி:
புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்த 2026 ஆம் ஆண்டின் முதல் ஆலோசனைக் குழு கூட்டம் டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.
வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய பங்களாதித்துவம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இருதரப்பும் இணைந்து செயலாற்றுவதற்குத் தேவைப்படும் வலுவான உந்துதல், நன்மை பயக்கும் அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமூக ஊடகப்பதிவு ஒன்றில் அவர் நன்றி தெரிவித்தார்.
பதற்றத்தைத் தணிக்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் குறித்து இந்திய அரசு அறிவுறுத்தியது. நிலைமை மோசமடைந்துள்ளதை அடுத்து இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களை தொலைபேசி வழி தொடர்புகொண்டு பேசினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
அப்போது, பேச்சுவார்த்தை, அரச தந்திரத்திற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தி டிரிப்யூன் ஊடகச் செய்தி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“சனிக்கிழமை (பிப்ரவரி 28) மதியம் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சேரை தொடர்புகொண்டு பேசினேன். அப்போது, பேச்சுவார்த்தை, அரச தந்திர நடவடிக்கைகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்,” என தமது எக்ஸ் பக்கத்தில் திரு ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு எக்ஸ் பதிவில், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸுடன் தொலைபேசி மூலம் பேசியபோது, தற்போதைய சூழல் குறித்த இந்தியாவின் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சிரியாவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள உள்ள இந்திய குடிமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

