கோயில் பணியாளர் தேர்வுக்குப் புதிய வாரியம்: அமைச்சர் ரமேஷ்

கோயில் பணியாளர் தேர்வுக்குப் புதிய வாரியம்: அமைச்சர் ரமேஷ்

2 mins read
bcb74c04-055c-4154-8340-a2ef7bd3e8d2
 இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ரமேஷ். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் கோயில் பணி​யாளர்​களை தேர்வு செய்யப் புதிய தேர்வு வாரி​யம் அமைக்​கப்​படும் என்று இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் சீ.ரமேஷ் அறிவித்துள்ளார்.

மேலும், கோ​யில் பெண் ஊழியர்​களுக்கு மகப்​பேறு விடுப்பு 12 மாதங்​களாக உயர்த்​தப்​படும் என 106 அறி​விப்​பு​களை அவர் வெளி​யிட்​டுள்​ளார்.

“ஆயிரம் ஆண்​டு​களுக்கு முற்​பட்ட 64 கோயில்​களில் ரூ.125 கோடி மதிப்​பீட்​டில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். சேதமடைந்துள்ள 150 கோயில்​கள், இதர 152 கோயில்​களில் ரூ.120 கோடி மதிப்​பீட்​டில் திருப்​பணி​கள் நடை​பெறும்,” என்றும் திரு ரமேஷ் கூறினார்.

கோவை, தேனி, திரு​வள்​ளூர், திருப்​பூர், காஞ்​சிபுரம், திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களில் உள்ள முக்​கியக் கோயில்​களில் ரூ.22.25 கோடி மதிப்​பீட்​டில் புதிய ராஜகோபுரங்​கள் கட்​டப்​படும் என்றார் அவர்.

மருதமலை, குன்​றத்​தூர், சமயபுரம், குலசேகரன்​பட்​டினம் ஆகிய கோயில்​களில் பக்​தர்​களுக்​காகப் புதிய மண்​டபங்​கள், இளைப்​பாறும் கூடங்​கள், முடிக் காணிக்கை மண்​டபம் கட்​டப்​படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திரு​வண்​ணா​மலை அருணாசலேசுவரர் கோயி​லில் ரூ.8 கோடி​யில் பாது​காப்பு அறை​கள், பாலூட்​டும் அறை​கள் மற்​றும் வரிசை மண்​டபங்​கள் அமைக்​கப்​படும் என்று அமைச்சரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் திருச்​செந்​தூர் சுப்​பிரமணி​ய சு​வாமி கோயி​லில் ரூ.11 கோடி​யில் கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பக்​தர்​களின் வசதிக்​காகத் திருச்​செந்​தூரில் 4 சிற்​றுந்​துகளும், திருநெல்வேலி சொரி​முத்து அய்​ய​னார் கோயிலுக்கு 2 பேருந்​துகளும் கட்​ட​ணமில்​லாச் சேவை​யாக இயக்​கப்​படும்.

பழுதடைந்த 25 தேர்​கள் ரூ.16 கோடி​யில் சீரமைக்​கவும் 100 கோயில் குளங்​கள் ரூ.40 கோடி மதிப்​பீட்​டில் புனரமைக்​கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கன்​னி​யாகுமரி, மருதமலை​யில் புதிய அன்​ன​தானக் கூடங்​கள், பிர​சாதம் தயாரிக்​கும் கூடங்​கள் அமைக்​கப்​படும்.

கோயில் பணி​யாளர்​களின் வாரிசுகளுக்​குக் கல்​லூரிப் படிப்​பில் முன்​னுரிமை, 50 விழுக்காட்டுக் கட்​ட​ணச் சலுகை வழங்​கப்​படும் என்று அமைச்​சர் ரமேஷ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்