தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புராரியில் புதுக் கட்டடம் இடிந்து விழுந்தது; இருவர் பலி

1 mins read
12 பேர் மீட்பு; பலரை இன்னும் காணவில்லை
8ab007e6-3a09-4d31-8f84-4ea67357b590
இடிபாடுகளுக்கிடையே இன்னமும் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடம் ஒன்று, ஜனவரி 27ஆம் தேதி இடிந்து விழுந்தது.

தெற்கு டெல்லியின் புராரியில் திங்கட்கிழமை மாலை நடந்த இச்சம்பவத்தில், இருவர் உயிரிழந்துவிட்டனர். குறைந்தது 12 பேர் இதுவரை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இடிபாடுகளுக்கு இடையே பலர் இன்னமும் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆஸ்கார் பொதுப் பள்ளிக்கு அருகே 200 சதுர முற்றத்தில் அமைந்துள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகத் தங்களுக்கு மாலை ஏழு மணியளவில் தகவல் கிடைத்தது என்று டெல்லி காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.

இதுவரை மீட்கப்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் மூன்று சிறுமிகளும் அடங்குவர்.

ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, கட்டடம் இடிந்ததற்கு அதன் அடித்தள கட்டமைப்பு பலவீனமாக இருந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இருப்பினும், விசாரணைகள் தொடா்ந்து நடந்து வருகின்றன. 

இந்நிலையில், கூடுதல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புத் தடுப்புகள் இட்டுள்ளனர்.

இதற்கிடையே, புராரியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தமக்குப் பெரும் கவலையை அளித்துள்ளதாக டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்