டெல்லியில் காற்று மாசைச் சமாளிக்க புதிய திட்டம்

டெல்லியில் காற்று மாசைச் சமாளிக்க புதிய திட்டம்

1 mins read
e2d45199-06f3-48cf-b36a-8627d6309d22
டெல்லியில் குளிர்காலத்தின்போது காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும்.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி​யில் குளிர்​காலத்​தில் காற்று மாசுபாட்டைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கான செயல்திட்​டத்தை அம்மாநில அரசு வெளி​யிட்​டுள்​ளது.

அதில் அரசு மற்​றும் தனி​யார் அலு​வல​கங்​களில் 50 விழுக்காட்டினர் வீட்​டிலிருந்து பணி​யாற்​று​வது குறித்துப் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.

வழக்கமாக டிசம்​பர் 10ஆம் தேதிமுதல் ஜனவரி 20ஆம் தேதிவரை காற்று மாசுபாடு உச்​சத்தை எட்​டும். அந்தக் காலகட்டத்தில் கட்​டு​மானப் பணி​களுக்கு கூடு​தல் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​படும்.

மேலும், பெட்ரோல் விநியோகத்துக்கும் சாலையில் வாகனங்கள் இயங்கவும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன.

கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் வாழும் புதுடெல்லி, உலகின் மாசடைந்த நகரங்களுக்கான பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

டெல்லியில் குளிர்காலத்தின்போது காற்றுத் தூய்மைக்கேடு அதிகமாக இருக்கும். காற்றில் அடர்ந்த பனி இருப்பதால் புகை மேலே செல்லாமல் நிலத்திற்கு அருகேயே சுற்றிவரும். இது சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

2022-2024 ஆண்டுகளில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட பலரும் டெல்லியில் உள்ள ஆறு அரசாங்க மருத்துவமனைகளை சிகிச்சைக்காக நாடினர். அந்தக் காலகட்டத்தில் ஏறக்குறைய 30,000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்