சென்னை: 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்குக் காவல் துறை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் ஜனவரி 1 அதிகாலை 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி உண்டு. உணவு, மதுபான விநியோகத்தையும் 1 மணிக்குள் முடிக்க வேண்டும்.
அனைத்து நுழைவாயில்கள், நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக்கூடாது; குளத்திற்குச் செல்லும் வழிகளை மூடி வைக்க வேண்டும்.
வாகனங்களை விடுதி வளாகத்திற்குள் மட்டுமே நிறுத்த வேண்டும்; சாலைகளில் நிறுத்தக் கூடாது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.
வளாகத்திற்குள் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினா, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

