தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா அழைத்து வரப்பட்ட தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ விசாரணை

2 mins read
5d20c6e7-2d97-4b8a-8995-243136174e6c
ஏப்ரல் 10ஆம் தேதி புதுடெல்லி வந்து சேர்ந்த பயங்கரவாதம் தொடர்புடைய தஹாவூர் ராணாவை (இடமிருந்து 2வது) தேசிய புலனாய்வு முகவையின் அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். - படம்: ஏஎஃப்பி

மும்பை: மும்பை பயங்கர தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை 18 நாள்கள் விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ 18 நாள்கள் விசாரணை நடத்தவிருக்கிறது.

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த பயங்கர தீவிரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் தஹாவூர் ராணா ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இந்திய அதிரடிப் படையினரால் ஒன்பது பயங்கர தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் பிடிபட்ட அஜ்மல் கசாப் விசாரணைக்குப் பிறகு 2012ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு குடியேறிய தஹாவூர் ராணாவை நாடு கடத்த இந்தியா நீண்டகாலமாக முயற்சி செய்து வந்தது.

தஹாவூர் ராணா பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ்ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது.

அவர், டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர். மும்பை தாக்குதலுக்கு முன்னதாக தஹாவூரும் ஹெட்லியும் பலமுறை சந்தித்துள்ளனர்.

அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளுக்கு முன் அளித்த வாக்குமூலத்தில் தஹாவூர் ராணாவின் பெயரை ஹெட்லி குறிப்பிட்டிருந்தார்.

தாக்குதலுக்கு முன்பு மும்பைக்கு வந்த அதே பயங்கரவாதிதான் ஹெட்லி. தாஜ் ஹோட்டல், சபாத் ஹவுஸ், லியோபோல்ட் கஃபே போன்ற பல முக்கியமான இடங்களில் அவர் ஆன்மிகப் பயிற்சி செய்தார்.

இதன் பின்னர், ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சிபெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், மதுபானக் கூடங்கள், உணவகங்கள், சபாத் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களைத் தாக்கினர்.

பயங்கரவாதியான ராணாவை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்த இந்திய அரசாங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முயன்று வருகிறது.

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுவித்தது.

இதையடுத்து நாடு கடத்துவதற்கு எதிராகத் தஹாவூர் ராணா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

தற்போது அவரை 18 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்