நைக்கி, அடிடாஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் காலணிகளைத் தயாரிக்கும் பவ் சென் நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையைத் திறக்கவுள்ளது.
கிட்டத்தட்ட 280 மில்லியன் வெள்ளியில் அந்த தொழிற்சாலைக் கட்டப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்தது.
புதிய தொழிற்சாலை மூலம் 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான், சால்காம்ப் போன்ற முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன.
தைவானைச் சேர்ந்த பவ் சென் நிறுவனம் 2022ஆம் ஆண்டு மட்டும் 272 மில்லியன் காலணி ஜோடிகளை உற்பத்தி செய்துள்ளது.
மியன்மார், பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் ஏற்கெனவே பவ் சென் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் உள்ளன.

