தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்பது பேர் வீர மரணம்

1 mins read
927dace4-53bf-43b5-a2c0-4003f173258f
ஒன்பது வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஊடகம்

ராய்ப்பூர்: ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் பகுதியில், திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ஒன்பது வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்