தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் இருவருக்கு நிபா கிருமிப் பாதிப்பு

1 mins read
40198e43-81c8-45a4-8411-f31f711d906f
கேரளாவில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு நிபா குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கேரள மாநிலத்தில் இருவர் நிபா கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர், மல்லப்புரம் மாவட்டத்தையும் மற்றொருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிஃபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. 

இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாகப் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஒருவர், 38 வயது பெண். அவருடன் குறைந்தது 100 பேர் தொடர்பில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது பாதிப்புச் சம்பவம், அண்மையில் உயிரிழந்த குழந்தையெனக் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையில் குழந்தைக்கு நிபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மலப்​புரம், பாலக்​காடு, கோழிக்​கோடு ஆகிய மூன்று மாவட்​டங்​களுக்கு சுகா​தார அதி​காரி​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். 

வேறு யாருக்காவது நிபா கிருமிப் பாதிப்புக்கான அறிகுறி உள்​ளதா எனக் கண்காணிக்க ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 26 சிறப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்பட்டுள்ளன.

மாநில சுகா​தார அமைச்​சர் வீணா ஜார்ஜ், “நிபா வைரஸ் பரவலைத் தடுக்க என்​னென்ன நடவடிக்​கைகள் எடுக்க வேண்​டுமோ அவற்றைப் பலப்படுத்தியுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

“நோயாளி​களு​டன் தொடர்​பில் இருந்​தவர்​களை அடை​யாளம் காண காவல்​துறை​யின் உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். மக்​களுக்கு உதவ தொலைபேசி உதவி எண்கள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மைய வாரங்​களில் இயற்​கைக்கு மாறான மரணம் ஏற்​பட்​டுள்​ளதா என ஆய்வு செய்ய உத்​தர​விட்​டுள்​ளோம்,​” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நிபாகிருமித்தொற்றுகேரளா