தொடர்ந்து 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சாதனை

தொடர்ந்து 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சாதனை

1 mins read
cbfbce37-b866-464c-9a18-72308a7f8103
நிர்மலா சீதாராமன். - படம்: ரெடிஃப்.காம்

புதுடெல்லி: இந்திய அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பட்ஜெட் அறிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். ஒரே பிரதமரின்கீழ் தொடர்ந்து ஒன்பது முறை பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்த பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளான 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், பட்ஜெட் தாக்கல் நிகழ்வு ஒருநாள் முன்பாக சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

ஆனால், இம்முறை பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்ட போதிலும், அன்று வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலகட்டங்களில் 10 முறை வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்து இருந்தார். எனினும், தொடர்ச்சியாக ஒன்பது முறை பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்தவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

குறிப்புச் சொற்கள்