நிதிஷ்: இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட்டு விலகேன்

1 mins read
e97a18a6-5f8c-4680-b9ea-6f549a6418df
பாஜகவில் இனி நிரந்தரமாக இருப்பேன் என்று கூறியுள்ளார் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் இனி நான் நிரந்தரமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருப்பேன். ஏற்கெனவே ரஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததன் மூலம் இரண்டு [Ϟ]முறை தவறு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் தராரி, ராம்கா், பெலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (13.11.2024)இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

தராரி தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் விஷால் பிரசாந்த் (பாஜக) போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நிதிஷ் குமாா் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது, ஏராளமான வகுப்புவாத மோதல்கள் நடந்தன. அந்த நிலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் முழுமையாக மாறியுள்ளது.

இருப்பினும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பீகார் மக்களிடையே பிளவை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

நடக்கவிருக்கும் இடைத்தோ்தலில் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா் என்றாா் நிதிஷ் குமாா்.

பீகாரில் தராரி உள்ளிட்ட நான்கு பேரவைத் தொகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவா்கள், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பதவி விலகினா். இதையடுத்து, அந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்