தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விவாகரத்து: போதுமான வருவாய் இருந்தால் பராமரிப்புத் தொகை கிடையாது

2 mins read
5b0016d0-921e-47c1-a882-c426eb8dd6bc
ஒரு பெண்ணின் வேண்டுகோளுக்குத் தீர்ப்பளிக்கும்போது பராமரிப்புத் தொகை குறித்து விவரிக்கப்பட்டது. - படம்: செயற்கை நுண்ணறிவு

புதுடெல்லி: வருவாய்க்கு யாரையும் சார்ந்திராத மனைவி அல்லது கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்கப்படாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

துணைவியாருக்கு நிரந்தரமாகப் பராமரிப்புத் தொகை வழங்குவது, இந்து திருமணச் சட்டத்தின்கீழ் சமூக நீதி நடவடிக்கையாகும் என்று உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது. அது, நிதி சமத்துவத்தை ஏற்படுத்தும் ஒன்று அல்ல என்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

அனில் கேத்தர்பால், ஹரி‌ஷ் வைத்யநாதன் சங்கர் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு இவ்வாறு விவரித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது. இந்திய ரயில்வே போக்குவரத்துச் சேவையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், விவகாரத்துக்குப் பிறகு கணவர் தனக்கு நிரந்தரப் பராமரிப்புத் தொகையும் இழப்பீடும் தரவேண்டும் என்று கேட்டதற்கு அந்த நீதிபதிகள் குழு பதிலளித்தது. அந்தப் பெண்ணின் கணவர் ஒரு வழக்கறிஞர்.

2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அந்தத் தம்பதியர், ஓராண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த பிறகு பிரிந்தனர். இரக்கமின்றி நடந்துகொண்டதன் தொடர்பில் அவர்களின் திருமணத்தை குடும்ப நீதிமன்றம் ஒன்று 2023ஆம் ஆண்டில் கலைத்தது. சமூக, வேலைச் சூழல்களில் மனைவி தன்னை மனத்தளவிலும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி இழிவுபடுத்தியதாகக் கணவர் குற்றஞ்சாட்டினார்.

குற்றச்சாட்டுகளை மறுத்த மனைவி, கணவர் தன்னைத் துன்புறுத்தியதாக பதில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

அவர்களின் திருமணத்தைக் கலைத்தது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட குடும்ப நீதிமன்றம், விவாகரத்துக்கு ஒப்புக்கொள்வதற்குக் கைமாறாக அப்பெண் ஐந்து மில்லியன் ரூபாய் (73,247 வெள்ளி) இழப்பீடு கேட்டதாகத் தெரிவித்தது. அதை அப்பெண் தமது சார்பில் தயார்செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களிலும் குறுக்கு விசாரணையின்போதும் உறுதிப்படுத்தினார்.

பராமரிப்புத் தொகை வழங்கவேண்டும் என்ற அவரின் கோரிக்கையை நீதிமன்றம் மறுத்தது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் வழக்கை உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்.

பிறகு உயர்நீதிமன்றம், கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாற்றம் இல்லை என்று கூறியது.

குறிப்புச் சொற்கள்