தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: மம்தா பானர்ஜி

1 mins read
d4a017f5-de19-4696-aead-9b6484c7b95a
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

“டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும்,” என்று தனது கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மம்தா பேசினார்.

மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நான்காவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் பெற்று ஆட்சியமைக்கும் என்று மம்தா நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் தேசிய அளவில் பாஜகவை கட்டுப்படுத்துவது ‘இண்டியா’ கூட்டணிக்கு கடினமாக இருக்கும் என்றும் மம்தா கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்