மாட்டிறைச்சி உண்ணத் தடை இல்லை: அசாம் முதல்வர்

மாட்டிறைச்சி உண்ணத் தடை இல்லை: அசாம் முதல்வர்

1 mins read
இதற்கு முன்னர் திரு சர்மா, மாட்​டிறைச்சி சாப்​பிடு​வோர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று கூறி​யிருந்தார்
d0f462c6-787b-4e71-92de-0c7673569b3d
அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. - படம்; இந்து தமிழ் திசை

கெளகாத்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அ​சாமில் மாட்​டிறைச்சி சாப்பிடுவது குறித்த தனது நிலைப்​பாட்டை முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்​ளார்.

இது தொடர்​பாக திரு சர்​மா, செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “அசாமில் மாட்​டிறைச்சி சாப்​பிடும் முஸ்​லிம் சமூகம் பெரிய அளவில் உள்​ளது. அவர்​களைச் சாப்​பிட வேண்​டாம் என்று எங்கள் கட்சி சொல்​ல​வில்​லை. உங்​கள் வீடுகளுக்குள் வைத்​துச் சாப்​பிடுங்​கள், பொது இடங்​களில் வேண்டாம் என்​று​தான் சொல்​கிறோம். மாட்டிறைச்சி உண்ணத் தடை ஏதும் இல்​லை,”என்​றார் அவர்.

இதற்கு முன்னர் திரு சர்மா, மாட்​டிறைச்சி சாப்​பிடு​வோர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று கூறி​யிருந்த நிலை​யில் தற்​போது தனது கருத்தை மாற்றியுள்ளார்.

முதல்வர் சர்மாவின் கருத்தைச் சமாஜ்​வாதி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார். ‘எக்​ஸ்’ தளத்​தில், “பாஜகவை அகற்​று​வோம், கோமா​தாவை பாது​காப்​போம்” என்று அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்​சியும் முதல்வர் சர்மாவை விமர்​சனம் செய்​துள்​ளது. தனது நிலைப்​பாட்​டில் இருந்து சர்மா பின்​வாங்கி விட்​ட​தாக அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்