மதுரை: நீர்நிலைகளை ஆக்கிரமிப்போரிடம் கருணை காட்டமுடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மக்களின் நலன் கருதி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருப்பதை நீதிபதிகள் சுட்டினர்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்தோர் அங்குப் பல ஆண்டுகளாக வாழ்வதாய்க் கூறப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இலவச பட்டா வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அந்த நடைமுறைகளை நிறைவுசெய்ய ஆறு மாதங்களாகும் என்று கூறப்பட்டது.