தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவை மறைமுகமாக தாக்கி பேசிய மாலத்தீவு அதிபர்

1 mins read
d2b4cec8-a3b8-4229-b408-42bfd3191f01
மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு. - படம் : இணையம்

புதுடெல்லி: மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு, தனது ஐந்து நாள் அதிகாரத்துவ சீனப் பயணத்தை முடித்துகொண்டு சனிக்கிழமை மாலே திரும்பினார்.

அங்கு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம், ஆனால், எந்த நாட்டுக்கும் எங்களைத் தாக்கிப் பேசும் உரிமையை நாங்கள் அளிக்கவில்லை,” என இந்தியாவை மறைமுகமாகச் சாடினார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு சிறிய நாடாக இருந்தாலும் 9 லட்சம் சதுர அடியில் பொருளாதார மண்டலத்தை கொண்டுள்ளது,” என்றார்.

“இந்த கடலில் மிகப்பெரிய பங்கை கொண்ட நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இந்த கடல் எந்த குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் சொந்தம் அல்ல. இந்த பகுதியில் அமைந்துள்ள எல்லா நாட்டிற்கும் சொந்தமானது. எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் மாலத்தீவுகள் இல்லை. நாங்கள் இறையாண்மை மிக்க சுதந்திரமான நாடு,” என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடி குறித்தும், அந்நாட்டின் சுற்றுலா வசதிகள் குறித்தும் மாலத்தீவின் சில அமைச்சர்கள் கேலி, கிண்டல் செய்தனர். இதற்கு இந்திய நாட்டு மக்கள் சமூக ஊடகம் வழியாக அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இதனால், மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாலத்தீவு அதிபரின் இந்தப் பேச்சு மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்