தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுரங்கப்பாதையில் கைப்பேசி சமிக்ஞை இல்லை; விபத்தில் இளையர் உயிரிழப்பு

1 mins read
72ea9f1f-6f40-4835-bff7-aae57dce8113
1.3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை கடந்த ஆண்டுதான் தொடங்கிவைக்கப்பட்டது. படம்: டுவிட்டர் -

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சுரங்கப்பாதையில் மோட்டார்சைக்கிள் விபத்தில் காயமுற்ற பதின்ம வயது ஆடவர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தொலைத்தொடர்பு சமிக்ஞை கோளாறு காரணமாக அங்கிருந்த வழிப்போக்கரால் காவல்துறையை உடனடியாக அழைக்க முடியவில்லை. இதன் விளைவாக, அவசர சேவைகள் அங்கு வந்துசேர்வதில் தாமதம் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு வீடு திரும்பிக்கொண்டு இருந்த 19 வயது ராஜன் ராய், சுரங்கப்பாதையில் விபத்தில் சிக்கிக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

விபத்தின்போது ராஜன் அணிந்திருந்த தலைக்கவசம் மோசமாக சேதமுற்றதைத் தொடர்ந்து, அவருக்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில், சுரங்கப்பாதையில் தொலைத்தொடர்பு சமிக்ஞை சரியில்லாததால் அவசர சேவைகளை உடனடியாக தொடர்புகொள்ள முடியாததைக் கருதி, சட்ட நடவடிக்கை எடுக்க இறந்தவரின் குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர்.

1.3 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தச் சுரங்கப்பாதை கடந்த ஆண்டுதான் தொடங்கிவைக்கப்பட்டது.