தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இந்திய விமான நிலையங்களில் கட்டாய கொவிட்-19 பரிசோதனைக்குத் திட்டமில்லை’

1 mins read
e3c7fd07-aba2-466e-ad2f-81abee959dbb
டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணி. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இருப்பினும், விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமில்லை என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜேஎன்.1 கொரோனா கிருமித் திரிபு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி புதன்கிழமைவரை அத்திரிபால் 21 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

ஆயினும், இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை என்றும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெறுவதையே தெரிவுசெய்துள்ளனர் என்றும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

கொவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதமும் கூடவில்லை என்று ‘மனோரமா’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் கொவிட்-19 தொற்றால் 22 பேர் இறந்துவிட்டனர்.

அந்நாட்டில் புதிதாக 594 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டதாக வியாழக்கிழமை பதிவானது.

குறிப்புச் சொற்கள்