கோவில் தங்கத்தை பணமாக்கும் திட்டமில்லை: இந்திய அரசு திட்டவட்டம்

கோவில் தங்கத்தை பணமாக்கும் திட்டமில்லை: இந்திய அரசு திட்டவட்டம்

கோப்புப் படம்: ஸீநியூஸ்

20 May 2026 - 10:30 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியக் கோவில்களில் உள்ள கோடிக்கணக்கான தங்கத்தை விற்றுப் பணமாக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அந்நாட்டின் நிதி அமைச்சு மறுத்துள்ளது.

மேலும், இதுகுறித்து பரவி வரும் செய்திகள் தவறானவை என்று மத்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் எந்த அடிப்படையும் இல்லாத முற்றிலும் தவறான வதந்தி என்றும் கோயில் அறக்கட்டளைகள் அல்லது சமய அமைப்புகளின் பொறுப்பில் உள்ள தங்கத்தை பணமாக்குவதற்கான திட்டம் ஏதுமில்லை என அந்த அமைச்சு கூறியது.

“கோயில் கோபுரங்கள், கதவுகள் அல்லது இதர கோவில் அமைப்புகளின் மீதுள்ள தங்கத்தகடுகளை இந்தியாவின் தங்க இருப்புகளாக கருதுவதாக பரவும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்ற தவறான தகவல்.

“தெளிவுப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்துகிறது,” என நிதியமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்