பதற்றம் இல்லை: மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் நிம்மதி

மத்திய கிழக்கிலிருந்து புதன்கிழமை 58 விமானங்கள் சேவை

பதற்றம் இல்லை: மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் நிம்மதி

2 mins read
3ca95bac-291a-4dd0-8926-5dc5e8502577
ஐக்கிய அரபுச் சிற்றரசிலிருந்து பெங்களூரு அனைத்துலக விமானநிலையத்தில் திங்கட்கிழமை இரவு வந்திறங்கிய பயணிகள். - படம்: மாத்ரூபூமி

புதுடெல்லி: ஈரான் மீதான போர்ச் சூழலுக்கிடையே மத்திய கிழக்கிலிருந்து இந்தியர்கள் நாடு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

துபாயிலிருந்து டெல்லிக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) முதல் ஏர் இந்தியா விமானம் வந்து இறங்கியது. இதில் 149 பயணிகள் வந்தனர்.

“வானத்தில் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்படுவதை நேரடியாகவே பார்க்க முடிந்தது,” என்றார் விமானத்தில் தாயகம் திரும்பிய இந்தியர் பியூஷ் பல்லவ்.

ஜெட்டாவிலிருந்து ஏறக்குறைய 200 பேர் செவ்வாய்க்கிழமை இரவு இண்டிகோ விமானத்தில் குஜராத்தின் அகமதாபாத் அனைத்துலக நிலையத்தில் தரையிறங்கினர்.

மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசுக்குத் திரும்பி வந்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.

துபாய், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் சூழ்நிலையைக் கையாளும் விதத்தை நாடு திரும்பும் பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர். துபாயில் இருந்து இந்தூர் திரும்பிய தொழிலதிபர் பிரவீன் கக்கர், “அங்கு நிலைமை பதட்டமாக இருந்தாலும், ஒட்டுமொத்த நிலைமை சீராக உள்ளது. அங்குள்ள அரசாங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது,” என்று தெரிவித்தார். மாற்று வழிகள் மூலம் நீண்ட தூர விமானச் செயல்பாடுகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மார்ச் 4 ஆம் தேதி திட்டமிடப்பட்ட 58 விமானங்களில், இண்டிகோ 30 விமானங்களையும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 23 விமானங்களையும் இயக்கவுள்ளன.

பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கூடுதல் விமானங்களை இயக்குவது, விமானக் கட்டணங்களில் அதிக உயர்வு இல்லாமல் உறுதிப்படுத்துவது, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வெளிநாட்டு அதிகாரிகள், வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதும் அடங்கும்.

இதற்கிடையே, டெஹ்​ரான் நகரிலுள்ள இந்​திய மாணவர்​களைப் பாது​காப்​பான இடங்​களுக்கு இந்​தி​யத் தூதரகம் மாற்​றி​யுள்​ளது.

டெஹ்​ரானுக்கு வெளியே அமைந்​துள்ள இடங்​களில் அவர்​கள் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்​குத் தேவை​யான போக்குவரத்​து, உணவு, தங்​குமிட வசதி​கள் ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளன. இந்த இடமாற்​றத்தை விரும்​பாத சில மாணவர்​கள் மட்​டும் டெஹ்​ரானிலேயே தங்​கி​யுள்​ளனர் என்று தூதகரம் தெரிவித்தது.

ஓமன் சுல்​தான், குவைத் இளவரசர் ஆகியோருடன் தொலைபேசி வாயி​லாக ஆலோசனை நடத்​திய பிரதமர் நரேந்​திர மோடி, அங்கு வசிக்​கும் இந்​தி​யர்களின் ​பாது​காப்பை உறுதி செய்​யு​மாறு கேட்​டுக்​கொண்டுள்ளார். திங்​கள்​கிழமையன்று சவூதி அரேபி​யா, பஹ்ரைன், ஜோர்தான் நாட்​டுத் தலை​வர்​களு​டன் அவர் பேச்சு நடத்தினார்.

குறிப்புச் சொற்கள்