நோக்கியா நிறுவன அதிகாரிகள் ரூ.19.33 கோடி மோசடி; சிபிஐ விசாரணை

நோக்கியா நிறுவன அதிகாரிகள் ரூ.19.33 கோடி மோசடி; சிபிஐ விசாரணை

1 mins read
f6897937-a312-422a-947f-ecfd3f40e481
போலி பிஎஃப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா அதிகாரிகள்மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. - படம்: இடிடெலிகாம்
Google News Preferred Icon

புதுடெல்லி: நோக்கியா நிறுவனத்தின் முன்னணி அதிகாரிகள் இருவர் போலி வைப்புநிதி (பிஎப்) கணக்குகளைத் தொடங்கி கிட்டத்தட்ட ரூ.19.33 கோடி ( S$3.09 மில்லியன்) சுருட்டியுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரும் முறைகேடு தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த வைபவ் வர்மா, காமராஜு முத்யாலா ஆகிய அதிகாரிகள் இருவரும் இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்ட முக்கியப் புள்ளிகள் என்று சிபிஐ வெளியிட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் இணைந்து 94 போலி பிஎஃப் கணக்குகளை சாதுரியமாக உருவாக்கி, ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பிடமிருந்து (இபிஎஃப்ஓ) இந்த நிதியை முறைகேடாகத் தங்களது கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

நோக்கியா நிறுவனம் 2023 ஆகஸ்ட் மாதம் வரை இபிஎஃப்ஓ சட்ட விலக்கு பெற்ற நிறுவனமாகச் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் 2023 ஜூலை மாதத்தில் தனது முந்தைய சேமிப்புத் தொகைகள் அனைத்தையும் அதிகாரபூர்வமாக இபிஎஃப்ஓ அமைப்பிடம் ஒப்படைத்தது.

அதன்பின் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை, மாற்று நடைமுறைகளின்போதுதான், இந்தக் கோடிக்கணக்கிலான மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்