வங்கியிலிருந்து ரூ.19,100 கோடியைத் திரும்பப் பெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள்

வங்கியிலிருந்து ரூ.19,100 கோடியைத் திரும்பப் பெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள்

2 mins read
8aac13a2-c4b4-48c3-9a7a-c991736c9115
2026 நிதி ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை வரத்து 14.413 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவிவரும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் தங்களது இந்திய வங்கிக் கணக்குகளிலிருந்து ஏறத்தாழ 2 பில்லியன் டாலரைத் (S$2.56 பில்லியன், ரூ.19,140 கோடி) திரும்பப் பெற்றுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதியில் 167.579 பில்லியன் டாலராக இருந்த வெளிநாடுவாழ் இந்தியர்களின் மொத்த வைப்புத்தொகை, மார்ச் மாத இறுதியில் 165.654 பில்லியன் டாலராகக் குறைந்தது.

இது புதிய முதலீடுகளைச் செய்வதைக் காட்டிலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது கணக்குகளிலிருந்து அதிகப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்த மாதாந்தரப் பின்னடைவு காரணமாக, 2026 நிதி ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை வரத்து 14.413 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது; இது முந்தைய நிதி ஆண்டில் 16.163 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதத்தில் பதிவான இந்த நிகர, புதிய முதலீடுகளைச் செய்வதைக் காட்டிலும் தங்களது கணக்குகளிலிருந்து அதிகப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

நீண்டகால நோக்கில், மத்திய கிழக்கு மோதல்கள் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை வரத்தில் மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மூத்த வங்கி அதிகாரிகளும் பொருளியல் வல்லுநர்களும் கருதுகின்றனர்.

“இந்தச் சிக்கல் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து, அந்தந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை வரத்து இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று சவுத் இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குநர் பி.ஆர். சேஷாத்ரி கூறியதாக ‘இக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்