தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குளிர் அலையை எதிர்த்துப் போராடும் வட இந்தியா

2 mins read
db4dc4a1-b975-4887-be32-e2e3ddae5859
காலை நேரத்தில் டெல்லி ரயில் நிலையம் இதுபோல் காட்சி அளிக்கிறது. - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: தேசியத் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாள்களைக் காட்டிலும் செவ்வாய்க்கிழமை காலை குளிர்ந்த காற்றுடன் வெப்பநிலை நிலவியது.

டெல்லியின் சில பகுதிகளை மூடுபனி மூடியிருந்ததுடன் குறைந்தபட்ச வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியசாக பதிவானது.

திங்கட்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியசாக இருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லியில் மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

ஜனவரி 28 முதல் நான்கு நாள்களுக்கு மூடுபனி நிலவும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 7 முதல் 11 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலத்திலும் செவ்வாய்க்கிழமையன்று குளிர் அலை நிலவியதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 30ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ‘அடர்ந்த பனிமூட்டம்’ தொடர்ந்து நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமையன்று ஒடிசாவின் புவனேஷ்வரில் அடர்ந்த மூடுபனியின் காரணமாக எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் காற்றின் தரக் குறியீடு ‘மோசமான’ பிரிவின்கீழ் 258 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குளிர்ந்த வானிலைக்கு மத்தியில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராட ஏராளமான மக்கள் கூடியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு பிரயாக்ராஜில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 29ஆம் தேதி இரண்டாவது ஷாஹி ஸ்னான் நடைபெறவுள்ளதால், மஹாகும்பமேளா விழா அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்