தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்ல; சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி என சிபிஐ உறுதி

1 mins read
00c7bf86-21e1-405c-84b6-ba0d59b1c384
சஞ்சய் ராய். - படம்: ஊடகம்

கோல்கத்தா: கோல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், தொடர்புள்ளதாகக் கருதப்படும் சஞ்சய் ராயின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவர் செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும் அவரை சஞ்சய் ராய் மட்டுமே சீரழித்துள்ளார் என்றும் இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்கான ஆதாரங்கள் சிபிஐக்கு கிடைத்துள்ளதாகவும் முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையின்போது சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சய் ராயின் மரபணுப் பரிசோதனை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இறுதி அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சிபிஐ தரப்பு விசாரணை மிகத் தாமதமாக நடைபெறுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்