புதுடெல்லி: இணைய விநியோக நிறுவனங்களின் பெயர்களில் நூதன முறையில் மோசடி நடப்பதால் இந்திய மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்தாலும், இணையக் குற்றவாளிகள் நாள்தோறும் புது புது யுக்திகளைக் கையாண்டு பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏமாற்று வேலையில் ஈடுபடுவோர் தற்போது நூதன வழியில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இணையத்தில் வாங்கியப் பொருள்களைப் பெறுவதற்கு, குறிப்பிட்ட சில எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு மோசடிக்காரர்கள் கைப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
21, 61, 67 ஆகிய வரிசையில் தொடங்கும் கைப்பேசி எண்கள் அவை. எனவே, அவ்வரிசையில் வரும் கைப்பேசி அழைப்புகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களை இந்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும், அந்த எண்களை நீங்கள் தொடர்புகொண்டால், இணைய வசதி இல்லாதபோதும் உங்கள் கைப்பேசி ஊடுருவப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், உங்களைத் தொடர்புகொண்ட நபர் அழைப்பை வேறு ஒருவருக்கு மாற்றுவதை நீங்கள் அறிந்தால், உடனடியாக உள்ளீடு செய்யவேண்டிய எண், குறியீடுகள் பற்றிய விவரங்களை அந்நாட்டு அது வெளியிட்டுள்ளது.
மேலும், இணையக் குற்றங்கள் குறித்து தொலைபேசிமூலம் அல்லது இணையத்தளம் வாயிலாகப் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

