திருமலை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் வசதிகுறைந்த கிட்டத்தட்ட 100 இளம்பெண்களுக்குப் பண ஆசையைக் காட்டி அவர்களை ஆடையில்லாமல் காணொளி எடுத்த கணேஷ் என்பவரையும் அவரது தோழியான ஜோஷ்னாவையும் ஆந்திர மாநிலக் காவல்துறை கைது செய்துள்ளனர்.
அந்தக் காணொளிகளை இருவரும் ஆபாச இணையப்பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆந்திர இணையப் பாதுகாப்புக் காவல்துறைக்குத் தெரியவந்தது. அதன்பேரில் இணையப் பாதுகாப்புப் பிரிவு காவல்துறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் மீது தனிக் கவனம் செலுத்திவரும் கருடா தனிப்படை குழுவினர் புதன்கிழமை (ஏப்ரல் 16) குண்டக்கல்லில் உள்ள கால்சென்டருக்கு சென்று கணேஷ் மற்றும் ஜோஸ்ஷ்னாவிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் இருவரும் இளம்பெண்களைக் கால்சென்டரில் அமைக்கப்பட்ட ஸ்டூடியோவுக்குக் கொண்டு வந்து அவர்களை ஆடையில்லாமல் காணொளி எடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது.
அந்தப் பெண்களுக்குச் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே அவர்கள் தந்ததாகத் தெரியவந்தது.
அந்த ஸ்டூடியோவில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் நிர்வாணக் காணொளிகள் இருந்தன.
அவற்றைக் காலவ்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்குடன் தொடர்புடைய லூயிஸ் என்பவரை அதிகாரிக்ள தேடி வருகின்றனர்.